கொரோனா சிகிச்சையில் வைத்தியர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்த 96 வயது மூதாட்டி!! - Yarl Thinakkural

கொரோனா சிகிச்சையில் வைத்தியர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்த 96 வயது மூதாட்டி!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த 96 வயதுடைய பெண்ணொருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

பெருவாலாவிலிருந்து காந்தகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர், கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் வெலிகண்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post