கொரோனா தொற்றா? யாழில் 94 பேரிடம் பரிசோதனை!! - Yarl Thinakkural

கொரோனா தொற்றா? யாழில் 94 பேரிடம் பரிசோதனை!!

யாழில் இன்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 94 பேருக்கு பி.சி.ஆர் ஆய்வுகூட பரிசோதனை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அப் பரிசோதனைகளின் முடிவுகளின்படி ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் உள்ள ஆய்வுகூடங்களில் இன்று 94 பேருடைய மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

குறிப்பாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 6 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 26 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 15 பேர்.

வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 33 பேருக்கே மேற்படி பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Previous Post Next Post