கொரோனா 90 வீதம் கட்டுப்பாட்டுக்குள்!! -விரைவில் முழுமை பெறும்: அனில் ஜசிங்க- - Yarl Thinakkural

கொரோனா 90 வீதம் கட்டுப்பாட்டுக்குள்!! -விரைவில் முழுமை பெறும்: அனில் ஜசிங்க-

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை 90 வீதம் கட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

இருப்பினும் நாட்டில் நடமுறைப்படுத்தப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவது எப்போது சாத்தியப்படும் என்று உறுதிபடத் தெரிவிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தகவல் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:-

இலங்கையில் தற்போது எங்கும் கொரோh தொற்று இல்லை என தெரிவித்துள்ள அவர் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டாக சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் நாட்டில் வைரசினை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது நாட்டை ஒரளவு திறந்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் எதிர்காலத்தில் விமானநிலையமும் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைரஸ் தொடர்ந்து பரவுவதை தடுப்பதற்காக சிறந்த சுகாதார பழக்கங்களை, சமூக விலக்கல்கள், மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றவேண்டிய பொறுப்புணர்வுள்ளது எனவும் அனில்ஜசிங்க தெரிவித்துள்ளார்.

அனைவரிடமிருந்தும் சமமான பங்களிப்பு அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் அரசதுறை ஊழியர்கள்,தனியார் துறை ஊழியர்கள், வர்த்தகர்கள், வீடுகளில் இருப்பவர்கள் என அனைவரும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையகத்தின் முடிவிற்கு ஆதரவும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகள் தயார் என அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post