வடக்கில் இன்றுவரை 831 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -சத்தியமூர்த்தி- - Yarl Thinakkural

வடக்கில் இன்றுவரை 831 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -சத்தியமூர்த்தி-

வட மாகாணத்தில் இன்றுவரைக்கும் 831 பேருக்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதான வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைத்திய சாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்களென 156 பேருக்கு பரிசோதணை நடத்தப்பட்டது. இதில் இருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும், வடக்கில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 636 பேருக்கும் இப் பரீசோதணை நடத்தப்பட்டது. அதில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுவரை கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு சிறப்பு வைத்திய சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தவர்களில் 6 பேர் முழுமையாக குணடைந்த நிலையில் தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இன்றும் 39 பேருக்கு கொரோனா பரிசோதணை நடத்தப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post