யாழில் இன்று 83 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!! - Yarl Thinakkural

யாழில் இன்று 83 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

யாழில் இன்றும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 83 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அப் பரிசோதனைகளின் முடிவுகளின்படி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தயி சாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் 83 பேருடைய மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

குறிப்பாக யாழ்.போதனா வைத்திய சாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 3 பேர், வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 58 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 10 பேர், கிளிநொச்சி பாதுகாப்புபடையின் ஆதார வைத்திய சாலையில் உள்ள 8 பேர், இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2 பேர் உள்ளிட்ட 83 பேரே குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களாவார்கள்.

Previous Post Next Post