கொரோனாவில் இருந்து நாட்டை காக்க செலான் வங்கி உதவி!! -800 முகக்கவசங்கள் பொலிஸாருக்கு வழங்கிவைப்பு- - Yarl Thinakkural

கொரோனாவில் இருந்து நாட்டை காக்க செலான் வங்கி உதவி!! -800 முகக்கவசங்கள் பொலிஸாருக்கு வழங்கிவைப்பு-

செலான் வங்கி ஊழியர்கள் தமது அன்றாட வங்கிச்சேவைகளை வழங்கி வருவதுடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதற்காக தமது ஒரு நாள் சம்பளத்தை வழங்கியுள்ளதுடன் வங்கியும் இதற்கு சமனான தொகையை வழங்கியுள்ளது.

இந்நிதியில் ஒரு பகுதி மேல்மாகாணத்திலுள்ள இலங்கை பொலிஸாருக்கும் நாடளாவியரீதியிலுள்ள பொதுசுகாதாரப்பரிசோதகர்களுக்கும் 8000 முகக்கவசங்களை வழங்குவதற்காக இலங்கை பொலீஸ் தலைமையகத்தில் வைத்து இன்று கையளிக்கப்பட்டது.

இதனை வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரியும் பணிப்பாளருமான கபில ஆரியரட்ன கையளித்தார். அத்துடன் இந்நிகழ்வில் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர் .

Previous Post Next Post