மேலும் இருவருக்கு கொரோனா!! -தொற்றாளர்களின் எண்ணிக்கை 797 ஆக உயர்வு- - Yarl Thinakkural

மேலும் இருவருக்கு கொரோனா!! -தொற்றாளர்களின் எண்ணிக்கை 797 ஆக உயர்வு-

மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை மட்டும் 26 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 797 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து இருவர் முழுமையாக குணமடைந்த நிலையில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் தொகை 215 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அப்பிரிவு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post