குணமடைந்த 5 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறி!! -யாழ் அரியாலையை சேர்ந்தவர்களாம்- - Yarl Thinakkural

குணமடைந்த 5 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறி!! -யாழ் அரியாலையை சேர்ந்தவர்களாம்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையை பெற்று முழுமையாக குணமடைந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை தனிமைப்படுத்தி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் நாட்டில் உள்ள சிறப்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கடந்த இரண்டு வாரங்களிற்று முன்னர் முழுமையாக குணமடைந்த நிலையில் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதணையின் போது அவர்களுக்குள்கு அதில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிறிதளவிலான அறிகுறி காணப்பட்டது.

இதனால் அவர்கள் தொடர்ந்து 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர். மீண்டும் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.
Previous Post Next Post