கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 5 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 535 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது என்று கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய அதிகாரி நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பில் மாவட்ட தொற்று நோயியில் வைத்திய அதிகாரி கருத்துத்தெரிவிக்கையில்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு விமானப்படை முகாமில் 175 பேரும், இயக்கச்சியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவு இராணுவமுகாமில் 80 பேரும், இயக்கச்சியில் அமைந்துள்ள 12 ஆவது படை இராணுவமுகாமும் 160 பேரும், முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமில் 60 பேரும், முழங்காவில் இராணுவமுகாமில் 60 பேரும் தங்க வைக்கப்பட்டுமருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலமாகிய 14 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன மேற்படி தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களில் முழங்காவில் பகுதியில் உள்ள கடற்படைமுகாமில் இருந்து நோய்த் தொற்றுக்குள்ளான நிலையில் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது தவிர மாவட்டத்தில் இருந்து எந்தவொரு நோயாளியும் இனங்காணப்பட்டவில்லை. இதுவரையும் பாதுகாப்பான ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.