கொரோனா சந்தேகம்!! -5,154 பேர் தனிமைப்படுத்தலில்- - Yarl Thinakkural

கொரோனா சந்தேகம்!! -5,154 பேர் தனிமைப்படுத்தலில்-

கடந்த 29 ஆம் திகதி வரை 11,056 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 29ஆம் திகதி வரை மொத்தம் 708 கடற்படையினர் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர்.

366 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 342 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post