இந்தியாவில் 50ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - Yarl Thinakkural

இந்தியாவில் 50ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1694ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 49ஆயிரத்தை கடந்துள்ளது.

மொத்தம் 49,391பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 2958பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 126பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous Post Next Post