கசிப்பு விற்பனை: பெண் உட்பட 5 பேர் கைது!! -தென்மராட்சியில் பொலிஸ் அதிரடி- - Yarl Thinakkural

கசிப்பு விற்பனை: பெண் உட்பட 5 பேர் கைது!! -தென்மராட்சியில் பொலிஸ் அதிரடி-

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்னெருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 10 லீற்றர் கசிப்பும், 60 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கெருடாவில், மட்டுவில் மற்றும் சரசாலையில் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதைத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post