வடக்கினைச் சேர்ந்த மேலும் 4 பேர் பூரண குணம்!! -இன்று வீட்டிற்கு வருவார்கள்: சத்தியமூர்த்தி- - Yarl Thinakkural

வடக்கினைச் சேர்ந்த மேலும் 4 பேர் பூரண குணம்!! -இன்று வீட்டிற்கு வருவார்கள்: சத்தியமூர்த்தி-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளா வடபகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்திமூர்த்தி தெரிவித்தார்.

இரணவில வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குணமடைந்த 4 பேரும் இன்று தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக நாட்டில் உள்ள கொரோனா சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்களின் ஏற்கனவே 10 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேலும் 4 பேர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர். அவர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

மேலும் 3 பேர் தொடர்ந்து வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post