கொரோனாவுக்கு 4மருந்துகள் பரிந்துரை - Yarl Thinakkural

கொரோனாவுக்கு 4மருந்துகள் பரிந்துரை

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி கமலேந்திர சிங், கொரோனா நோய் சிகிச்சைக்கு நான்கு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார்.

மிசோரி பல்கலை. பேராசிரியரான அவர் தன் குழுவினருடன் இணைந்து நான்கு மருந்துகளின் செயற்பாடுகளை, கணினி மூலம் பரிசோதித்து ஆய்வறிக்கையை, 'பேதோஜென்ஸ்' என்ற மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளார்.

அதில், ரெம்டெசிவிர், 6-ப்ளேரோரசில், ரிபாவிரின், பேவிபிரவிர் ஆகிய நான்கு மருந்துகளை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இந்த மருந்துகளை பரிசோதனை கூடத்தில் மேலும் ஆய்வுக்குட்படுத்தி முடிவுகளை உறுதிப்படுத்திய பின் சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

Previous Post Next Post