பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பேரும் வீடு திரும்பினர்!! -சத்தியமூர்த்தி தகவல்- - Yarl Thinakkural

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பேரும் வீடு திரும்பினர்!! -சத்தியமூர்த்தி தகவல்-

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 4 பேரும் முழுமையான பரிசோதணைகளின் பின்னர் தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டள்ளனர் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று காலை வைத்திய சாலையில் நடந்த செய்தியாளர் சந்திபில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதணையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post