கொரோனா தொற்றா? -வடக்கில் 47 பேரிடம் இன்று பரிசோதணை- - Yarl Thinakkural

கொரோனா தொற்றா? -வடக்கில் 47 பேரிடம் இன்று பரிசோதணை-

யாழ்.போதனா வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் இன்றும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதணை நடத்தப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த பரிசோதணைகளின் முடிவுகளின்படி அதில் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர், வைத்திய சாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 4 பேர், காங்கேசன்துறை கடற்படை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 8 பேர் மற்றும் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 30 பேருக்குமே மேற்படி பரிசோதணை நடத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post