கொரோனாவா? -யாழில் இன்றும் 49 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதணை- - Yarl Thinakkural

கொரோனாவா? -யாழில் இன்றும் 49 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதணை-

யாழில் இன்றும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆய்வுகூட பரிசோதனை செய்யப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதானா வைத்திய சாலையின் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட மேற்படி பரிசோதணைகளின் முடிவுகளின்படி அதில் ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேர், முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் மற்றுமு; விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 27 பேருக்கே குறித்த பரிசோதணை நடத்தப்பட்டது என்றும் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Previous Post Next Post