குணமடைபவர்களின் தொகை அதிகரிப்பு!! -இன்று 43 பேர்- - Yarl Thinakkural

குணமடைபவர்களின் தொகை அதிகரிப்பு!! -இன்று 43 பேர்-

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாபவர்கள் மிக வேகமாக குணமடைந்து வருகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்று கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 43 பேர் பூரண குணமடைந்து வைததியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 520ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தொற்று நோய் பிரிவில் 2 பேரும், வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற 5 பேரும், கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனையை சேர்ந்த 15 பேர், கடற்படை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 20 பேர் மற்றும் ஹோமாகம மருததவமனையை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு சிகிச்சைப் பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Previous Post Next Post