இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39ஆயிரத்து 980ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1301ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு ஒரு நாளைக்கு இரண்டு முறை அறிவித்து வருகிறது.
அதன்படி இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39980ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1301ஆக உயர்ந்துள்ளது.