சுவிஸ் போதகருடன் தொடர்பு!! -எஞ்சிய 4 பேருக்கு இன்று பரிசோதணை- - Yarl Thinakkural

சுவிஸ் போதகருடன் தொடர்பு!! -எஞ்சிய 4 பேருக்கு இன்று பரிசோதணை-

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 4 பேருக்கும் இன்று கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நடத்தப்பட்ட பரிசோதணையில் அவர்களுக்கு தொற்று வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தார்.

சுவிஸ் மத போதகருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற ரீதியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் அடையாளம் காணப்பட்டு பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு உள்ளவர்களுக்கு முதல் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதணையில் 16 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் கொரோனா சிறப்பு வைத்திய சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மிகுதியாக குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 4 பேருடைய இரத்த மாதிரிகளும் இன்று சேகரிக்கப்பட்ட பரிசோதணைக்காக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த பரிசோதணைகளின் முடிவுகள் இன்று இரவு கிடைத்தது. அதன்படி அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post