கடற்படையை விரட்டும் கொரோனா நேற்று 35 பேரை தாக்கியது!! - Yarl Thinakkural

கடற்படையை விரட்டும் கொரோனா நேற்று 35 பேரை தாக்கியது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் நேற்றும் 35 கடற்படையினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட 1023 பேரில் 581 பேர் கடற்படையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான கடற் படையினரில் 209 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், ஏனையோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறிய 209 கடற்படையினரும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

Previous Post Next Post