கொரோனா சிக்கலுக்குள் வெலிசர முகாம்!! -3000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை- - Yarl Thinakkural

கொரோனா சிக்கலுக்குள் வெலிசர முகாம்!! -3000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை-

வெலிசர கடற்படை முகாமிற்குள் பரவிய கொரோனா வைரஸ் தொற்று முகாமிற்கு வெளியே பரவுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என கடற்படை பேச்சாளர் இசுருசூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

கடற்படையினர் சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் வெலிசர முகாமிற்குள் உள்ள கடற்படையினருக்கு பிசிஆர் பரிசோனைகளை முன்னெடுத்து வருகின்றனர் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முகாமிற்குள் உள்ளவர்களிடம் இதுவரை 3000 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். சுகாதார தொழில்நுட்பவியலாளர்கள் மாதிரிகளை சேகரித்து அரச ஆய்வுகூடங்களிற்கு அனுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சிலவேளைகளில் கொரோனா தொற்று இல்லை என சோதனைமுடிவுகள் வந்தாலும் நாங்கள் தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொள்கின்றோம் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post