2 கோரோனா நோயாளிகள் ஆபத்தான நிலையில்!! -குவைத்திருந்து வந்தவர்களாம்- - Yarl Thinakkural

2 கோரோனா நோயாளிகள் ஆபத்தான நிலையில்!! -குவைத்திருந்து வந்தவர்களாம்-

குவைத்திலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா நோயாளிகள் என அடையாளம் காணப்பட்ட இருவர் ஐடிஎச்சில் தீவிரகண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து நோயாளிகளிற்கும் சிகிச்சை வழங்கப்படுகின்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் இத்தாலிய தாக்கிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளனர்.

நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது நாங்கள் அனைத்து நோயாளிகளையும் அவதானித்து வருகின்றோம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் இத்தாலியில் பரவிய வைரசின் வகையினால் பாதிக்கப்பட்டு;ள்ளனரா என்பதை தற்போது தெரிவிக்க முடியாது எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Previous Post Next Post