கொரோனா ஆபத்து வலயத்தில் இருந்து வவுனியா வந்த 276 பேர்!! - Yarl Thinakkural

கொரோனா ஆபத்து வலயத்தில் இருந்து வவுனியா வந்த 276 பேர்!!

கொரோனா அதிகளவில் பரவிவரும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 276 கடற்படையினர் தனிமைப்படுத்துவதற்காக வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

நேற்று இரவு 7 மணியளவில் 17 பேருந்துகளில் குறித்த கடற்படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் முகாமைச் சேர்ந்த கடற்படையினர் பலர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக 17 பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் இராணுவ முகாமில் 174 கடற்படையினரும், வவுனியா பெரியகட்டு கடற்படை முகாமில் 102 கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post