26.04 2020 எதிர்காலத்தை வெற்றிகொள்ள வீட்டுக்கொரு தோட்டம் தேவை - Yarl Thinakkural

26.04 2020 எதிர்காலத்தை வெற்றிகொள்ள வீட்டுக்கொரு தோட்டம் தேவை

26.04 2020 எதிர்காலத்தை வெற்றிகொள்ள வீட்டுக்கொரு தோட்டம் தேவை
26.04 2020 எதிர்காலத்தை வெற்றிகொள்ள வீட்டுக்கொரு தோட்டம் தேவை
கொரோனா பாதிப்பு உலகளவில் பாரிய பொருளாதார தாக்கங்களை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக பல கோடி பேர் வேலை வாய்ப்புக்களை இழப்பதுடன் பல இலட்சக்கணக்கான நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆயினும் கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் எப்போது மீளும் என்பதற்கு இதுவரை விடைகிடையாத நிலையில் கொரோனாப் பாதிப்புக்குள் எப்படி பாதுகாப்பாக நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம் என்பது குறித்தே பல நாடுகளும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

இதற்கு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புக்கள் முற்றாக சிதைந்துவிடும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்கும் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலைக்கு நிதி நிலைமை சரிந்துவிடும் என்பதுமே முக்கிய காரணம்.

உலக சுகாதார நிறுவனம் உலகளவில் கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளில் பாரிய பஞ்சத்தினை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளது. இந் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமையமான யுனிசெவ் உலகளவில் சிறுவர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் அபாயமுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் உள்ளுர் உற்பத்தித் துறைகளை ஊக்கிவித்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்துவதே அரசுகளிடம் உள்ள ஒரே வழியாக காணப்படுகின்றது.

ஏன் எனில் உலகளவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாத நிலையிலேயே கொரோனாவின் தாக்கம் பல நாடுகளில் காணப்படுகின்றது. தற்போதைக்கு ஏற்றுமதி வணிகத்துக்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

ஆகவே இலங்கையை பொறுத்தவரையில் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்கப்படுத்துவதே எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு இருக்கும் உபாயமாக காணப்படுகின்றது.
அரசாங்கம் தற்போது மக்கள் மத்தியில் வீட்டுத் தோட்டங்களை உருவாக்குவதை ஊக்கப்படுத்தி வருகின்றது. ஆயினும் பெருமளவான மக்கள் வீட்டுத் தோட்டச் செய்கையில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. இவ்வாறான மக்கள் வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவம் குறித்து உணரவேண்டும்.

ஏன் எனில் எதிர்காலத்தில் எவ்வாறான மாற்றங்களும் இடம்பெறலாம் என்ற நிலையில் பஞ்சத்திலிருந்து மக்கள் தம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு வீட்டுக்கொரு தோட்டம் இருப்பது அவசியம்.

தற்போது அரசாங்கத்தால் நாடு முழுவதும் விவாசயத் திணைக்களங்கள் ஊடாக வீட்டுத் தோட்டச் செய்கை பண்ணுவதற்கு விரும்பியவர்களின் விபரம் திரட்டப்பட்டு அவர்களுக்கான விதைகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
இச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் வீட்டுக்கொரு தோட்டம் அமைப்போம். இதன் ஊடாக எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பஞ்சத்திலிருந்து நிச்சயமாக மாற்றத்தை காணமுடியும்.
ஜெ-ஜெ
Previous Post Next Post