25.04 2020 அதிகரிக்க ஆரம்பித்த கொரோனா தாண்டவம் -மக்களே அவதானம்- - Yarl Thinakkural

25.04 2020 அதிகரிக்க ஆரம்பித்த கொரோனா தாண்டவம் -மக்களே அவதானம்-

25.04 2020 அதிகரிக்க ஆரம்பித்த கொரோனா தாண்டவம் -மக்களே அவதானம்-
25.04 2020 அதிகரிக்க ஆரம்பித்த கொரோனா தாண்டவம் -மக்களே அவதானம்-
இலங்கையில் இரு தினத்தில் 65 வரையானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளமை 5000 வரையானோர் இரு நாட்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டமை சுகாதாரத்துறையை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நேற்றுடன் கொரோனா தொற்றாளர்கள் 400 ஐ கடந்திருப்பதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு இனம் காணப்படுவோர் தொகையில் ஏற்பட்டிருக்கும் சடுதியான அதிகரிப்பு அடுத்து வரும் நாட்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா அதிகரிப்புக்களால் நேற்று முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் அவசியத்தை அரசுக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா அதிகரிப்பு இலங்கையில் தொடர்ச்சியான ஊரடங்கு மற்றும் சமூக முடக்கல்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இறுக்கமாக பேண வேண்டிய நிலையையும் எட்டியிருக்கிறது.

அதற்கப்பால் பொது மக்கள் இனிவரும் நாட்களில் அநாவசியமாக நடமாடுவது ஒன்று சேர்வது கொரோனாவை வலிந்து இழுத்து தம்மையும் தமது சமூகத்தையும் கொரோனா தொற்றுக்குள்ளாக்கி முடக்கும் செயற்பாடே.

இலங்கையை பொறுத்தவரை கொரோனா தாக்கம் அதிகரிக்கும் காலப்பகுதியை அண்மித்திருக்கின்றது. இனிவரும் நாடகளில் பேராபத்து காத்திருப்பதையே புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றது.
முதல் 57 நாட்களில் 100 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட நிலையில் அடுத்து வந்த 16 நாட்களில் 100 கொரோனா தொற்றாளர்களும் அதற்கடுத்து வந்த 8 நாட்களில் 100 கொரோனா தொற்றாளர்களும் இனம்காணப்பட்டனர்.

ஆயினும் இறுதியாக கண்டறியப்பட்ட 100 பேர் நான்கு தினங்களில் கண்டறியப்பட்டுள்ளமை கொரோனாவின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றது. இவ் அதிகரிப்பு அடுத்து வரும் தினங்களில் மேலும் பன்மடங்கு அதிகரிக்கலாம் என்பதையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
வளர்முக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலையினை இலங்கை அண்மிக்குமாயின் ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும் ஸ்தம்பித்துவிடும். ஏன் எனில் குறிப்பிட்டளவுக்கு மேல் கொரோனாவை கட்டுப்படுத்தும் வலு, வளம் இலங்கையில் இல்லை என்பதே உண்மை.
ஆகவே மக்கள் தாமாக உணர்ந்து மருத்துவத்துறையின் ஆலோசனைகளுக்கு செவிமடுத்து வரும் முன் காப்பதே கொரோனாவில் இருந்து எம்மையும் நாட்டையும் கபப்பற்றுவதற்கான ஒரே வழி.
வடக்கைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதனைக் கட்டுப்படுத்தும் வலு சுகாதாரப் பிரிவுக்கு இருக்கின்றதா என்பது கேள்விக்குள்ளான நிலையில் வடக்கு மக்கள் கொரோனாவின் தீவிரம் உணர்ந்து உரிய சமூக இடைவெளிகளைப் பேணுவதுடன் சுகாதார நடைமுறைகளை பேணி ஊரடங்கு வேளையில் வீட்டிலேயே இருப்பதும் அவசியம்.

ஜெ-ஜெ
Previous Post Next Post