225 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!! - Yarl Thinakkural

225 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!!

225 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ராகம, வெலிசறை பகுதியில் 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரிடமிருந்தும் 225 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் அரிசி பைகளில் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் குறித்த நால்வரிடமும் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர்களிடமிருந்து பெறுமதியான வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post