புதிய தொற்றாளர்கள் இல்லை!! -கொரோனா இல்லாமல் கடந்து சென்ற 22 மணிநேரம்- - Yarl Thinakkural

புதிய தொற்றாளர்கள் இல்லை!! -கொரோனா இல்லாமல் கடந்து சென்ற 22 மணிநேரம்-

இன்றை நாளில் கடந்து சென்ற 22 மணித்தியாலங்களில் புதிதாக கொரோனா நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நேற்று இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் சேர்த்து இதுவரையில் 925 பேரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இன்று மட்டும் 32 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post