சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!! -சற்று முன் 21 பேருக்கு தொற்று- - Yarl Thinakkural

சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!! -சற்று முன் 21 பேருக்கு தொற்று-

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

சற்று முன்னர் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று மட்டும் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களுடன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.

Previous Post Next Post