2,193 கடற்படை தனிமைப்படுத்தப்பட்டனர்!! -கொரோனாவில் கோர பிடியில் வெலிசர- - Yarl Thinakkural

2,193 கடற்படை தனிமைப்படுத்தப்பட்டனர்!! -கொரோனாவில் கோர பிடியில் வெலிசர-

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 2,193 கடற்படையினர் வெலிசர முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட கடற்படையினருடன் நெருங்கி பழகியவர்கள் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதுவரையில், கடற்படையைச் சேர்ந்த 578 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர்களில் 237 பேர், பூரணமாகக் குணமடைந்துள்ளனர் என்றும், ஏனைய 341 பேரும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

Previous Post Next Post