நாளை முதல் 2 நாள் 15 மணிநேர ஊரடங்கு தளர்வு!! -மீண்டும் 6 ஆம் திகதிமுதல் தொடர்ந்து 5 நாள் அமுலில்- - Yarl Thinakkural

நாளை முதல் 2 நாள் 15 மணிநேர ஊரடங்கு தளர்வு!! -மீண்டும் 6 ஆம் திகதிமுதல் தொடர்ந்து 5 நாள் அமுலில்-

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய 21 மாவட்டங்களுக்கு நாளை திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊடரங்கு சட்டம் தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு அன்றிரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இதன்படி நாளையும், நாளை மறுதினமும் அதிகாலை இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரைக்கும் அமுலில் இருக்கும்.

குறித்த 21 மாவட்டங்களிலும் 6 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கே தளர்த்தப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post