வேலிசறையிலிருந்து இரவோடு இரவாக வவுனியா வந்த 17 பஸ்கள்!! - Yarl Thinakkural

வேலிசறையிலிருந்து இரவோடு இரவாக வவுனியா வந்த 17 பஸ்கள்!!

கொரோனா அச்சம் அதிகமாக காணப்படும் வெலிசர கடற்படை முகாமில் இருந்து புறப்பட்ட 17 பேருந்துக்கள் இரவோடு இரவாக வவுனியாவை வந்தடைந்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த 17 பேருந்துகளிலும் கடற்படையினர் கொண்டுவரப்பட்டு பம்மைபடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 500 அதிகமான கடற்படையினர் அந்த பேருந்துக்களின் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பஸ்களை வவுனியா, குருமன்காடு பகுதியில் வைத்து இரு ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது அங்கு வந்த கடற்படை அதிகாரிகள் ஊடகவியலாளர்களைப் புகைப்படங்களை அழிக்குமாறு கூறித் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது 17 பஸ்களும் வீதியில் நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அங்கு பதற்றநிலை காணப்பட்டது.

Previous Post Next Post