ரயில் விபத்து: 17பேர் பலி - Yarl Thinakkural

ரயில் விபத்து: 17பேர் பலி மகாராஷ்டிர மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய புலம்பெயர்தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் அருகே நேற்று இரவு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். 

இன்று அதிகாலையில் அந்த வழித்தடத்தில் சென்ற சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் குழந்தைகள் 17பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.மகாராஷ்டிராவில் தங்கியிருந்த மத்திய பிரதேச மக்கள் ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி நடந்து சென்றுள்ளனர். 

ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரயிலும் வராது என்று நினைத்த தொழிலாளர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் தண்டவாளத்தில் படுத்து தூங்கியுள்ளனர். இதனால் நேற்று அதிகாலையில் சரக்கு ரயில் சென்ற போது அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. 
Previous Post Next Post