15 ஆம் திகதி மதுபானசாலைகள் திறப்பு!! - Yarl Thinakkural

15 ஆம் திகதி மதுபானசாலைகள் திறப்பு!!

எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் இலங்கையில் மதுபானசாலைகள் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவேளை மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து அதிகளவு கூட்டம் கூடியதால் மீண்டும் மதுபானக் கடைகள் பூட்டப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நாடு வழமைக்கு திரும்பவுள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில் சமூக இடைவெளியை பேணாமல் இருந்த காரணத்தால் மூடப்பட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் திறப்பதற்கு

அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்தவகையில் எதிர்வரும் 15ம் திகதி பெரும்பாலும் அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post