துபாயிலிருந்து அழைத்துவரப்பட்ட 15 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

துபாயிலிருந்து அழைத்துவரப்பட்ட 15 பேருக்கு கொரோனா!!

துபாயிலிருந்து நாட்டிற்று அழைத்துவரப்பட்ட 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பரிசோதனைகள் ஊடாக கண்டறிப்பட்டிருந்தது.

இரு கடற்படையினருக்கும் துபாயிலிருந்து அழைத்துவரப்பட்ட 15 பேருக்கும் நோய் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்படையினர் இருவரும் முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கொரோனரவைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1045 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post