ஒரு நாளில் 150 பேருக்கு கொரோனா!! -சடுதியான அதிகரிப்பிற்கு காரணம் இதுதான்- - Yarl Thinakkural

ஒரு நாளில் 150 பேருக்கு கொரோனா!! -சடுதியான அதிகரிப்பிற்கு காரணம் இதுதான்-


நாட்டில் கடந்த நாட்களை விட நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்படுபவர்களின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது.


குறிப்பாக நேற்று பட்டும் 150 கொரோனா நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 92 பேரும், சென்னையிலிருந்து வந்த 5 பேரும், இலங்கை கடற்படையினர் 53 பேருமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குவைத் நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட அனைவருக்குமான பி.சி.ஆர் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. மிகுதியாக இருந்துவர்களுக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் கடற்படையினர் தனிமைப்படுத்தி வைத்திருந்த காலம் நேற்று நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கான பிரிசோதனை செய்யப்பட்டது.

இதனாலேயே நேற்று மட்டும் அதிகளவான பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்படுபவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Previous Post Next Post