15 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!! -6 பேரை கைது செய்த பொலிஸ்- - Yarl Thinakkural

15 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!! -6 பேரை கைது செய்த பொலிஸ்-

15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 17 தொடக்கம் 20 வயதான 6 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் எம்பிலிப்பிட்டிய குற்றவியல்  நீதிமன்றிம் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 26 திகதி வரை தடுப்பு காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலன் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post