யாழ் போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் ஆரம்பம்!! -தற்போது 14 பேருக்கு பரிசோதணை- - Yarl Thinakkural

யாழ் போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் ஆரம்பம்!! -தற்போது 14 பேருக்கு பரிசோதணை-

யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதணை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதன்படி இன்று வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதணை நடத்தப்படவுள்ளது.

குறித்த பரிசோதணைகளின் முடிவுகள் மதியம் வெளியாகும். மேலும் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்படும் மாதிரிகளும் இங்கு உள்ள ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


Previous Post Next Post