இன்று மட்டும் 14 பேருக்கு கொரோனா!! -தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக உயர்வு- - Yarl Thinakkural

இன்று மட்டும் 14 பேருக்கு கொரோனா!! -தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக உயர்வு-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று மட்டும் 14 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 732 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இதன்படி கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் தொகையும் 194 ஆக உயர்ந்துள்ளது என்று அப்பிரிவு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post