பொருளாதார பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 13.5கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது
கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் முடங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியான பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 13.5கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம்,
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 1இலட்சம் கோடி டொலர் வாய்ப்பை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 12கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் சரியுமென தெரிவித்துள்ளது.