முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு!! -நினைவேந்தல் நடத்தியதால் வழக்கு- - Yarl Thinakkural

முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு!! -நினைவேந்தல் நடத்தியதால் வழக்கு-

முள்ளிவாய்க்கால் நினைவு வார அஞ்சலி நிகழ்வுகளை நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

இதன்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

யாழ்;.மாவட்டத்தில் நடந்த தமிழ் இனப்படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை அனுஸ்ரித்து வந்தனர்.

குறித்த நிகழ்வுகள் நடத்துவதற்கு பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும், அவர்கள் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தியிருந்தனர்.

இது தொட்பில் இன்று யாழ்.பொலிஸாரால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கினை விசாரித்த நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கொரோனாவால் நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை குறித்துக்காட்டியே மேற்படி எத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
2. பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்
3. தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
4. சட்ட ஆலோசகர் சுகாஸ்
5. சட்ட ஆலோசகர் காண்டீபன்
6. யாழ் மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன்
7. யாழ் மாநகரசபை உறுப்பினர் தனுசன்
8. யாழ் மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன்
9. விஸ்ணுகாந்
10. சுதாகரன்
11. தமிழ்மதி

ஆகியோரை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்துமாறு யாழ் நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான கடிதம் சற்று முன்னர் பொலிஸாரால் அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளை தொடர்பான அறிவிப்பு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post