யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 ஆவது நபரும் குணமடைந்தார்!! -இன்று வீடு திரும்புகின்றார்- - Yarl Thinakkural

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 ஆவது நபரும் குணமடைந்தார்!! -இன்று வீடு திரும்புகின்றார்-

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த நபர் யாழ்.போதனா வைத்திய சாலையின் நோயாளர் காவு வண்டியூடாக இரணவில வைத்திய சாலையில் இருந்து அழைத்துவரப்பட்டு அவருடைய வீட்டிற்கு கொண்டு சென்று விடப்படுவார். வீட்டில் அவர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 10 பேர் முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post