நாடு முழுவதும் 105 மணிநேர தொடர் ஊடரங்கு!! -மீறினால் கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கை- - Yarl Thinakkural

நாடு முழுவதும் 105 மணிநேர தொடர் ஊடரங்கு!! -மீறினால் கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கை-

நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

ஊடரங்கு காலப்பகுதியில் சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இன்று இரவு தொடக்கம் சிறப்பு நடவடிக்கை சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டி ருக்கின்றது. இதன் மூலம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர், ஊரடங்கு சட்டத்தை மீறுவோர் கைது செய்யப்படவுள்ளனர்.

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 11ம் திகதி அதிகாலை வரையில் அமுலில் இருக்கும். இந்த காலப்பகுதியிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை அனைவரும் மதித்து நடக்கவேண்டும்.

பண்டிகைகாலம் என்றாலும் மக்கள் தமதும், சமுகத்தினதும் பாதுகாப்புக்காக வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்றார்.

Previous Post Next Post