தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம்!! -தொண்டமானின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்: மஹிந்த- - Yarl Thinakkural

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம்!! -தொண்டமானின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்: மஹிந்த-

ஆறுமுகம் தொண்டமான் இறப்பதற்கு சிறிது நேரத்தின் முன்னரும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தின் ஆரம்பத்தில், ஆறுமுகன் தொண்டமான் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரஸ்தாபித்தார்.

நேற்று முன் தினம் அவர் காலமாகுவதற்கு முன்னதாகத் தன்னைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பிரதமர் குறிப்பிட்டார். 

தோட்டத் தொழிலாளர்களிற்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும், ஈ.பி.எவ் கொடுப்பனவு பற்றி பேசினார். 

இதை பேசி சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post