திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் 100 பேர் பங்கு கொள்ளலாம்!! -சுகாதார அமைச்சின் அறிவிப்பு- - Yarl Thinakkural

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் 100 பேர் பங்கு கொள்ளலாம்!! -சுகாதார அமைச்சின் அறிவிப்பு-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோய் பரவலை தடுப்பதற்காக திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கும் கொள்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டால், அதில் அதிகபட்சம் 100 விருந்தினர் மாத்திரமே இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருமண விழா மற்றும் பிற அனைத்து விழாக்களும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி ஏற்பாடு செய்யவேண்டும் என சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துணை இயக்குநர் ஜெனரல் வைத்திய லட்ச்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post