யாழின் 1 ஆவது கொரோனோ நோயாளி வீடு திரும்பினார்!! - Yarl Thinakkural

யாழின் 1 ஆவது கொரோனோ நோயாளி வீடு திரும்பினார்!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட தாவடி வாசி 65 நாட்களின் பின்னர் முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்திய சாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

வைத்திய சாலையில் இருந்து வெளியேறிய அவர் யாழ்.போதனா வைத்திய சாலையின் நோயாளர் காவு வண்டியில் வீடு வந்து சேர்ந்துள்ளார்.

புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் மத போதகருடன் பழகிய தாவடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி இருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் (ஐ.டி.எச்) சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுமார் 65 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது முழுமையாக குணடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

Previous Post Next Post