வடக்கில் கொரோனா அச்சம்!! -ஆளுநர் தலமையில் உயர்மட்ட ஆராய்வு கூட்டம் இன்று- - Yarl Thinakkural

வடக்கில் கொரோனா அச்சம்!! -ஆளுநர் தலமையில் உயர்மட்ட ஆராய்வு கூட்டம் இன்று-

கொரோனா அச்சத்தால் முடங்கியுள்ள யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் நிலமைகள் தொடர்பில் ஆராய ஆளுநர் தலைமையில் இன்று உயர் மட்டக் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இன்றைய கூட்டத்துக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் என முக்கிமானவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் ஊரடங்கு, யாழ்ப்பாணத்தில் அகப்பட்டுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது, அத்தியவசியத் தேவைகளை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதிலுள்ள இடர்பாடுகள் உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

கொரோனா பரவல் எந்தளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது மேலும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா, அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படும்.
Previous Post Next Post