அரியாலையைச் சேர்ந்தவர்களுக்கே கொரேனா!! -இருவரும் முதியவர்களாம்- - Yarl Thinakkural

அரியாலையைச் சேர்ந்தவர்களுக்கே கொரேனா!! -இருவரும் முதியவர்களாம்-

இன்று கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட இருவரும் அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணுக்கும் 61 வயதுடைய பெண்ணுக்குமே கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

இவர் இருவரும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகர் நடத்திய ஆராதனையில் கலந்து கொண்டதுடன், குறித்த மத போதகருடன் நெருங்கி பழகியுமுள்ளனர்.

இதனால் இவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி பலாலி படைமுகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதுவரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post