தனிமைப்படுத்தலில் நிலையத்தில் இருந்தவர்களுக்கே கொரோனா!! -யாழ் வாகிகள் அஞ்சத்தேவையில்லை: சத்தியமூர்த்தி- - Yarl Thinakkural

தனிமைப்படுத்தலில் நிலையத்தில் இருந்தவர்களுக்கே கொரோனா!! -யாழ் வாகிகள் அஞ்சத்தேவையில்லை: சத்தியமூர்த்தி-

யாழில் தொடர்ந்து கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுவதை கண்டு பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பலாலி படைமுகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் மிக நீண்ட நாட்களாக தடுத்து வைத்துள்ளவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இத் தொற்று ஏனையவர்களுக்கு ஏற்பட வாய்ப்புக்கள் மிக மிக குறைவு என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் ஒவ்வொருவரும் சுகாதார துறையினருடைய அறிவுறுத்தலுக்கு அமைய நடந்த கொண்டு, தங்களையும், தம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பணிப்பாளர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Previous Post Next Post