புத்தாண்டை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்!! -ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை- - Yarl Thinakkural

புத்தாண்டை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்!! -ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை-

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப அங்கத்தவர்களுடன் மட்டுப்படுத்தி கொண்டாடும் படி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாகவே இக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

புத்தாண்டிற்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், நாட்டின் இக்கட்டான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, கவனமாவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவது அவசியமென பொது மக்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன் என்று அந்த டுவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post